பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாளை புதிய அறிவிப்பை வெளியிடுவார் என, அமைச்சர்கள் உறுதியளித்ததாக ஃபோட்டா ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் அறிவிப்பை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார்.