Also Watch
Read this
By: Manigandan Raja

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் 15ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மறுநாள் 16ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பெரிய சூரியூர் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டு தோறும் தை 2 ஆம் நாள் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் அன்பில் மகேஷிடம் கிராம மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று 3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டது.
இதையும் படியுங்கள் : பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved