கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு நாளை முதல் இணையவழி மூலமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர். குணா குகை ,தூண் பாறை, மோயர் சதுக்கம், பைன் மரக் காடுகள், பேரிஜம் ஏரி ஆகிய பகுதி செல்வதற்கு வனத்துறையினர் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்து டிக்கெட் வழங்கி வரும் நிலையில், இனிமேல் phone pay, g pay மூலமாக மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் டிக்கெட் வழங்குவதற்கு ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும் என் கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : ஆற்காட்டில் பொங்கல் பானை விற்பனை மந்தம்