news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் பாதயாத்திரை
tv

Also Watch

அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் பாதயாத்திரை

சிறுவாபுரி, திருவள்ளூர்

43

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Temple

முருக பக்தர்கள் பேரவை சார்பில் பாதயாத்திரை :

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபட்டனர். பொன்னேரி அருகே ஆரணி கிராமத்தில் அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு வேல் காவடி எடுத்து,

அலகு குத்தி பக்தர்கள் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால்குடம் எடுத்து கொண்டு பாதயாத்திரையாக சென்று வழிபாடு நடத்துவதுவர். 34ஆம் ஆண்டு பங்குனி உத்திர
திருவிழாவையொட்டி இன்று ஆரணியில் காப்புக் கட்டிக்கொண்ட பத்தர்கள் அலகு குத்திக்கொண்டனர்.

மேலும் காவடி, எடுத்தும், அலகு குத்திக்கொண்ட பக்தர்கள் ஆரணியில் இருந்து சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பக்தர்கள் சுமார் 6கிமீ தூரம் பாதயாத்திரையாக சென்று முருகனை வணங்கினர்.

100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் தலைகளில் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து சிறுவாபுரி முருகன் கோவில் முன்பு அலகு குத்திக் கொண்ட பக்தர்கள்
சரண கோஷம் எழுப்பியபடி வழிபட்டனர்.

காவடிகளை, சுமந்தும், அலகு குத்தியும் பக்தர்கள் அரோகரா, அரோகரா முழக்கங்களை எழுப்பியவாறு முருகன் அருள் பெற்றனர். பக்தர்கள் அலகு குத்தி, சரண கோஷங்களுடன் காவடி எடுத்து சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

Related Link
'முதலமைச்சர் ஆளுநர் மாளிகையை அதிர வைப்பார்'

'முதலமைச்சர் ஆளுநர் மாளிகையை அதிர வைப்பார்'


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரந்தூர் விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved