Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரியில் கடல் அரிப்பால் சேதமடைந்துள்ள கடற்கரைச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொத்தவிளை, பள்ளம், சங்குத் துறை உட்பட கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட கடற்கரை சாலை, பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் அரிப்பால் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை புதுப்பிக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மீண்டும் கடல் அரிப்பு ஏற்படாத வகையில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை தொடர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.