news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "மக்களே, ஆஃப்பாயில் சாப்பிட வேண்டாம்"
tv

Also Watch

tv

Read this

"மக்களே, ஆஃப்பாயில் சாப்பிட வேண்டாம்"

அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்

123

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பறவைக் காய்ச்சல் பரவுவதால் மக்கள் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தி உள்ளார். இதுபோன்ற நேரங்களில் இறைச்சியை முழுவதுமாக வேகவைத்து உண்பதே சிறந்ததாகும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறி இருப்பதாவது;
பறவைக் காய்ச்சல் தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அந்த தகவல் கிடைத்ததும் காகங்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் திடீரென்று இறந்தால், அதனை பார்ப்பவர்கள் உடனடியாக ஆழமாக குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆஃப் பாயில் வேண்டாம்
திடீரென்று உயிரிழக்கும் கோழிகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆஃப் பாயில் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். தமிழகத்தில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று இதுவரை ஏற்படவில்லை. மாவட்ட அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

மத்திய அரசு அறிவுறுத்தல்
சென்னை, அடையாறில் இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அப்போது, ‘ஹெச் 5. என் 1’ என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, தலைமை செயலாளருக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Related Link
அடக்கி வாசிக்கும் சி.விஜயபாஸ்கர்

அடக்கி வாசிக்கும் சி.விஜயபாஸ்கர்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
6 hrs 25 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved