Also Watch
Read this
By: Web Team

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் காணப்படும் சாலையால் கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, எருமைப்பட்டி சோழங்கநத்தம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் எருமைப்பட்டி, சோழங்கநத்தம் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை பள்ளி, மருத்துவமனை, கல்லூரி செல்பவர்களும் விவசாயிகள் தங்களது விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த சாலை, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் காட்சியளிக்கிறது. இந்த சாலையை கடந்து செல்லும் போது, பலமுறை மாணவ மாணவிகள் கீழே விழுந்து காயங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
கிராம பொது மக்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்றும் தாமதிக்கும் பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் கிராம பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved