Also Watch
Read this
By: Web Team

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று இரவு 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாகவும், 20 முதல் 30 நிமிடங்கள் வரை சந்திப்பு நிகழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருப்பார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.