Also Watch
Read this
By: Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கந்துவட்டி கும்பல் தனது பைக்கை பறித்து கொண்டதாக கூலி தொழிலாளி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
சின்னதக்கை கிராமத்தை சேர்ந்த வடிவேலு என்பவர் கருணாகரன் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கினார்.
இதற்காக இதுவரை அவர் 80 ஆயிரம் ரூபாய் வட்டியாக செலுத்தியிருக்கும் நிலையில் கடந்த மே மாதம் வடிவேலை தாக்கிவிட்டு கடனுக்காக பைக்கை கருணாகரன் பறித்ததாக தெரிகிறது.
இதனைதொடர்ந்து தன்னை தாக்கியதாக வழக்குபதிவு செய்த போலீசார் இதுவரை தனது வாகனத்தை மீட்டுதரவில்லை என வடிவேல் குற்றம்சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved