news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோயில் தேரை நிறுத்த இடவசதி கோரி பொதுமக்கள் மனு
tv

Also Watch

tv

Read this

கோயில் தேரை நிறுத்த இடவசதி கோரி பொதுமக்கள் மனு

கொசப்பாடி, கள்ளக்குறிச்சி

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Temple car issue

இடவசதி கோரி பொதுமக்கள் மனு :

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேர் நிறுத்துவதற்கு இடவசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனுக்கள் அளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் வைரக்கண்ணன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் கண்ணன் மற்றும் பழனியம்மாள் ஆகியோரின் வீட்டின் முன்பகுதியில் கட்டப்பட்டிருந்த சீட் கொட்டகையை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இருவரையும் காவல்துறையினர் வீட்டிலிருந்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Related Link
ரயில் நிலைய நடைமேடையில் 2 டன் ரேஷன் அரிசி

ரயில் நிலைய நடைமேடையில் 2 டன் ரேஷன் அரிசி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
7 hrs 57 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved