Also Watch
Read this
By: Web Team

தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தூய்மை பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால் 10 லட்ச ரூபாய் நிதி உதவி, சுய தொழில் தொடங்கினால் 35 சதவிதம் வரை மானியம், காலை உணவு, படிப்படியாக சொந்த வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட அறிவிப்புக்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved