Also Watch
Read this
By: Web Team

கும்பகோணம், அதன் சுற்று வட்டார பகுதிகளில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கருப்பூர் நத்தம் பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் நடவு செய்யப்பட்ட நெற் பயிர்கள் நீரில் மூழ்கி, அழுகி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள கருப்பூர் நத்தம் பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் 15 தினங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. நடவுக்கு தயாராக உள்ள நாற்றங்கால், அழுகி வருவதால் அதனை கரைகளில் ஏற்றும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பின்பு, தண்ணீர் தடையின்றி செல்லாமலும், வாய்க்கால் தூர் வாரப்படாததன் காரணமாகவும் மழை நீர் வடிய வழியின்றி, வயலிலேயே தேங்கி விடுகிறது.

இதனால், இந்த பயிர்கள் அழுகி வருவதாகவும், இதுவரை ஒரு ஏக்கருக்கு ரூ.18,000 செலவு செய்து நெற்பயிர்கள் அழுகி வருவதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி, மழை நீர் உடனுக்குடன் வடிய வழி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved