Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் மதுபானக் பாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்து முன்னணி அமைப்பினரும், பொதுமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, டிஎஸ்பியிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவேங்கடம் சாலையில் உள்ள தனியார் மதுபான பார் சாலையோரம் அமைந்துள்ளதால் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதாக கூறி சாலைமறியலில் ஈடுபட்டதோடு, டிஎஸ்பியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதையும் படியுங்கள் : ஷேர் மார்க்கெட்டில் நட்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு