news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மன்னார்குடி அருகே வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
tv

Also Watch

மன்னார்குடி அருகே வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

மன்னார்குடி, திருவாரூர்

61

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

கடையடைப்பு போராட்டம் :

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் பெருகவாழ்ந்தான் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனம் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி தொடங்க திட்டமிட்டு முதற்கட்டமாக மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியை தொடங்க உள்ளது.

சோலார் மின் உற்பத்திக்கான தளவாட பொருட்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் இந்த சோலார் மின் உற்பத்தி நிலையத்தால் தங்கள் கிராமத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் சுமார் 300 ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாதிக்கும் நிலத்தில் நீரின் அளவும் குறைந்து ஒட்டுமொத்தமாக பெருகவாழ்ந்தான் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இப்பகுதி வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.இந்த தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.தங்கள் கோடிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் இப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
மேயர் சென்ற கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

மேயர் சென்ற கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved