news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மாணவர்களை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்பு, பெற்றோர் புகார்
tv

Also Watch

tv

Read this

மாணவர்களை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்பு, பெற்றோர் புகார்

செங்கம், திருவண்ணாமலை

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18(1)

அரசு உத்தரவை மீறி, காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களை கட்டாயப்படுத்தி, பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாக, பெற்றோர் புகார் கூறி உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில், விடுமுறை நாட்களிலும் மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைத்து, சிறப்பு வகுப்பு நடத்தி வருகின்றனர். இது, மாணவர்களுக்கு மன அழுத்தம், மன உளைச்சலை ஏற்படுத்தும் என பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.
காலாண்டு தேர்வு நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என,  பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நிலையிலும், சிறப்பு வகுப்பு நடந்து வருகிறது. எனவே, தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
45 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved