Also Watch
Read this
By: Web Team

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ய முயன்ற நபருக்கு, விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
சஞ்சீவிராயன் பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன், கடந்த 2019-ஆம் ஆண்டு அவலூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்யவும் முயன்றுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், அவலூர்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து, விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.