news-tamil-logo

3/18/2026, 4:27:09 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்
tv

Also Watch

tv

Read this

இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்

இடையக்கோட்டை, திண்டுக்கல்

Posted on: Feb 04, 2026 11:29 AM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஹாலோ பிளாக் தயாரிக்கும் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்த இளைஞர். கம்பெனி ஓனரிடம் சம்பளம் வாங்கிவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற இளைஞர் திடீர் மாயம். இளைஞரின் பிறப்புறுப்பை அறுத்தும், கற்களால் தாக்கியும் கொடூர கொலை. சக ஊழியரே இளைஞரை கொலை செய்தது அம்பலம். இளைஞரை சக ஊழியர் கொலை செய்தது ஏன்? பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்யும் அளவுக்கு என்ன முன்விரோதம்? பின்னணி என்ன?

வீட்டைவிட்டு சென்ற மகனை காணாததால் தாய் பதற்றம்
வேலை பாக்குற ஓனர்கிட்ட சம்பளம் வாங்கிட்டு வர்றதா சொல்லிட்டு வீட்டவிட்டு கிளம்பிப்போன இளைஞர் விடிஞ்சி மறுநாளாகியும் வரவே இல்ல. அதனால, பதறுன தாய், மகனோட செல்போன் எண்ணுக்கு கால் பண்ணிருக்காங்க. பலமுறை ரிங்காகியும் இளைஞர் போனை எடுக்கவே இல்ல. அடுத்து, நண்பகல் 11 மணியளவுல போனை அட்டெண்ட் பண்ணின ஒரு நபர், இடையக்கோட்டை பகுதியில உள்ள ஒரு ஆத்துக்குள்ள உங்க மகன் மயங்கி கிடக்குறதாகவும், வந்து தூக்கிட்டு போங்கனும் சொல்லிருக்காரு. ஆனா, அடுத்த வார்த்தை பேசுறதுக்குள்ளேயே போன் ஸ்விட்ச் ஆப் ஆகிருக்குது. அதக்கேட்டு இன்னும் பதறுன தாய், தன்னோட உறவினர்களோ போய் ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்க. அடுத்து, வழக்குப்பதிவு பண்ணி விசாரணையில இறங்குன போலீசார் இளைஞரை தேடும் பணியில இறங்கிருக்காங்க.

ஒரு இளைஞரை விசாரித்தபோது தெரியவந்த அதிர்ச்சி தகவல்
இதுக்கு நடுவுல ஜவ்வாதுபட்டி நங்காஞ்சி ஆத்துல ஒரு இளைஞரோட சடலம் கெடக்குறதா போலீசுக்கு ஒரு தகவல் கிடைச்சிருக்கு. அதுக்குப்பிறகு கம்ப்ளைண்ட் குடுத்த அம்மாவை அழைச்சிக்கிட்டு அந்த ஆத்துக்குப்போய்ருக்காங்க போலீசார். அங்க சடலமா கெடந்த தன்னோட மகனை பாத்து கத்திக் கதறுன தாய், வேலை பாக்குற இடத்துல சம்பளம் வாங்கிட்டு வர்றதா சொல்லிட்டு போனானு சொல்லிருக்காங்க. அதனால, அந்த இளைஞர் வேலை பாத்த ஊழியர்கள்கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்போ, ஒரே ஒரு இளைஞர் மட்டும் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடிச்சிருக்காரு. அந்த இளைஞரை மடக்கி பிடிச்சி விசாரிச்சப்பதான் பல விஷயங்கள் வெளியவந்துச்சு.

பெருமாளை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த இளைஞர் ஸ்ரீதர்
திண்டுக்கல் கே.அத்திக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் விமலா. இவங்களோட 25 வயசான இளைய மகன் பெருமாள் அதே பகுதியில உள்ள ஒரு ஹாலோபிளாக் கம்பெனியில கூலி வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. இவரும், இவரோட பணியாற்றும் சக தொழிலாளியான பாறையூர் பகுதியை சேர்ந்த 22 வயசான இளைஞர் ஸ்ரீதரும் அடிக்கடி மதுபோதையில ஓரினச்சேர்க்கையில ஈடுபட்ருக்காங்க. அப்படிதான், சம்பவத்தன்னைக்கு ரெண்டுபேரும் இடையகோட்டை டேம் பக்கத்துல உக்காந்து மது குடிச்சிருக்காங்க.

ஏற்கெனவே, ஹாலோபிளாக் கம்பெனிக்கிட்ட மதுகுடிச்ச ரெண்டுபேரும் மறுபடியும் மது குடிச்சதால போதை தலைக்கேறிருக்குது. அப்போ, ஸ்ரீதர் பெருமாளை ஓரினச்சேர்க்கைக்கு அழைச்சிருக்காரு. ஆனா, அதுக்கு பெருமாள் மறுக்க ஸ்ரீதர் கோவத்துல கத்தி சண்டை போட்ருக்காரு. அடுத்து, பைக்ல ரெண்டுபேரும் ஜவ்வாதுபட்டி நங்காஞ்சி ஆத்து பாலத்துக்குக்கீழ வந்து மது குடிச்சிருக்காங்க. அதுக்குப்பிறகு ஓரினச்சேர்க்கையில ஈடுபட்ருக்காங்க. அப்பவும், வாக்குவாதம் நடந்துருக்குது.

ஸ்ரீதரை கைது செய்து கம்பி எண்ண வைத்த காவல்துறையினர்
அந்த வாக்குவாதத்துல டென்ஷன் ஆன பெருமாள் ஸ்ரீதரோட பிறப்புறுப்புல தாக்கிருக்காரு. பதிலுக்கு ஆத்திரமடைஞ்ச ஸ்ரீதர் பெருமாளை கீழே தள்ளி, தலையில கல்லை தூக்கிப்போட்டு கொலை செஞ்சிருக்காரு. அடுத்து, அவரோட பிறப்புறுப்பை அறுத்து சடலத்தை தண்ணீர்ல மூழ்கடிச்சி அவர் தலை மேல பெரிய கல்லை தூக்கி வச்சிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்காரு. அதுக்குப்பிறகு, மறுநாள் காலையில எதுவுமே தெரியாதமாதிரி தான் வேலை பாக்குற கம்பெனிக்கு போய்ட்டாரு ஸ்ரீதர். இதுக்குமத்தியிலதான் தன்னோட மகனை காணோம்னு போன் பண்ணிருக்காங்க பெருமாளோட தாய். அப்போ, அவ்வழியாபோன ஒருத்தரு இளைஞரோட செல்போனை அட்டெண் பண்ணி உங்க மகன் சடலமா கெடக்குறதா சொல்லிருக்காரு.

அதுக்குப்பிறகு சார்ஜ் இல்லாம செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனதால எதிர்முனையில பேசுன நபர் யாருனு பெருமாளோட அம்மாவுக்கு தெரியல. அதனால, நடந்த விஷயத்த மட்டும் சொல்லி கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்க. அதுக்குப்பிறகு போலீசாரோட கண்ணுல சிக்குன ஸ்ரீதருக்கு கையில விலங்கு மாட்டப்பட்ருக்குது.

Related Link
வயலில் கள்ளக்காதலனுடன் உடலுறவு

வயலில் கள்ளக்காதலனுடன் உடலுறவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
1 min agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved