Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங்குடியில், பால் பாக்கெட் ஏற்றி வந்த தனியார் மினி சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டின் சுவரை இடித்துக் கொண்டு உள்ளே புகுந்த விபத்தில், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட ஐந்து பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படும் நிலையில், சரக்கு வாகன ஓட்டுநர் சிவசங்கரன் என்பவர் பலத்த காயமடைந்தார்.
விபத்து குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.