news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழைய ஓய்வூதியத் திட்டம் பறிப்பு அதிமுக ஆட்சிக்காலத்தில் தான்...
tv

Also Watch

tv

Read this

பழைய ஓய்வூதியத் திட்டம் பறிப்பு அதிமுக ஆட்சிக்காலத்தில் தான்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

39

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் பழைய ஓய்வூதிய திட்டம் பறிக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

நன்றி அறிவிப்பு மாநாடு
தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவித்ததற்கு சென்னையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், வேர்வை துளி சிந்தி உழைத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரத்தக்கண்ணீர் வரவழைத்தது தான் கருணையில்லா அதிமுக ஆட்சி என்று கடுமையாக விமர்சித்தார்.

திட்டமிட்டு நிதி நெருக்கடி
முதல்வருக்கு நன்றி தெரிவித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் சென்னையில் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட முறையாக வழங்குவது இல்லை. நமக்கான வரிப் பகிர்வை ஒன்றிய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. வரிப் பகிர்வை குறைத்தாலும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. திட்டமிட்டு நிதி நெருக்கடியை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கி வருகிறது. ஜி.எஸ்.டி. காரணமாக மாநிலத்தின் வரி வருவாய் குறைந்து கொண்டே போகிறது.

அதிமுக ஆட்சியில் தான்
அரசியல் ரீதியாக மட்டுமின்றி, நிர்வாக ரீதியாகவும் ஒன்றிய அரசின் நெருக்கடியை சமாளித்து திட்டங்களை அறிவிக்கிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தியது அதிமுக ஆட்சியில்தான். வேர்வைத்துளி சிந்திய அரசு ஊழியர்களுக்கு ரத்தக்கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி. அரசு ஊழியர்களின் நலன், எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டே ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தோம்.

அமைச்சரவையும், அரசு ஊழியர்களும் தான்
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள்; நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம். நாணயத்தின் இரு பக்கங்களாக இருப்பது அமைச்சரவையும், அரசு ஊழியர்களும் தான். நன்றி கூறி நமக்கான உறவை தூரமாக்கிட வேண்டாம். கலைஞரின் ஆட்சி என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்காக்கக் கூடிய பொற்காலமாக இருந்தது. மக்களுக்காக பணியாற்றக் கூடிய அரசு ஊழியர்களும் சேர்ந்ததுதான் அரசாங்கம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

Related Link
தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் தரவில்லையா? கை நழுவியதா?

தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் தரவில்லையா? கை நழுவியதா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனது தகுதி தான் குறையும் - காட்டமாக பேசிய முதலமைச்சர்

4
16 mins agoshare
தருமபுரியில் முதல்வர் பிரச்சாரம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved