Also Watch
Read this
By: Web Team

முன்னாள் பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
பாமகவில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் தொடர்ச்சியாக கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்.
இதனால் விரக்தியடைந்த சில நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.