news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேசியக்கட்சிகளின் ஒரே நம்பிக்கை
tv

Also Watch

tv

Read this

தேசியக்கட்சிகளின் ஒரே நம்பிக்கை

விளவங்கோடு வாக்காளப் பெருமக்களே... தேர்தல் 2026

28

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேசியக்கட்சிகளின் நம்பிக்கை தொகுதியான விளவங்கோட்டை கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், காய்நகர்த்தி வரும் நிலையில், மறுபுறம் பாஜகவும் பக்குவமாக அரசியல் பணிகளை கையாண்டு வருகிறது. அரசியலில் நியூ என்ட்ரி கொடுத்துள்ள த.வெ.க.வும் இளைஞர்களை ஈர்க்கும் வேலையில் இறங்கி உள்ள நிலையில், விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டிருக்கும் காங்கிரஸ் கைக்கு அந்த தொகுதி செல்லுமா? அல்லது வேறு யார் கைக்கு செல்லும் என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

* தமிழக அரசியலில் தேசியக்கட்சிகளின் கோட்டை விளவங்கோடு
* 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது விளவங்கோடு சட்டமன்ற தொகுதி
* விளவங்கோட்டில் இதுவரை வெற்றி பெறாத திமுக மற்றும் அதிமுக


தமிழக அரசியலில் தேசியக்கட்சிகளின் கோட்டையென்றால் அது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்களோடு சட்டமன்ற தொகுதி தான். 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி, அரசியல் ரீதியாகவும், சமூக, புறநகர்ப்புற வளர்ச்சி அடிப்படையிலும் தனித்தன்மை பெற்றதாக விளங்குகிறது. திராவிட கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தமிழ்நாட்டில், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் திமுகவோ அல்லது அதிமுகவோ இதுவரை தங்களது வெற்றியை பதிவு செய்த வரலாறே இல்லை. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை தான் நீண்டகாலமாக வெற்றிபெற வைத்து, தொகுதி மக்கள் அழகு பார்த்து வருகின்றனர்.

அதிலும், காங்கிரஸ் தான் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொண்ட திமுகவும், அதிமுகவும் நேரடியாக தாங்கள் போட்டியிடுவதை விட தேசியக் கட்சிகளுக்கே அந்த தொகுதியை ஒதுக்குகின்றன. ஆரம்பகாலத்தில் தங்கள்வசம் இருந்த விளவங்கோட்டை பழையபடி தங்கள்வசமே கொண்டு வரவேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராடி வருகிறது. ஆனாலும், வசப்படவில்லை. இதனிடையே, விளவங்கோட்டில் கால்ஊன்ற பாஜகவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

* தொடர்ந்து வெற்றி பெறும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி
* விளவங்கோடு தொகுதியில் அசைக்க முடியாத இடத்தில் உள்ள காங்கிரஸ்
* தேசியக்கட்சிகளுக்கே தொகுதியை ஒதுக்கும் திமுக மற்றும் அதிமுக
* ஆரம்ப காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் இருந்த விளவங்கோடு


இதுஒருபுறமிருக்க, கொடுத்த வாக்குறுதிகள் கிடப்பிலேயே இருப்பதாகவும், ஓட்டுக்கு மட்டும் நாங்கள் வேண்டுமா? என அரசியல் கட்சியினர் மீது தொகுதி மக்களும் அதிருப்தியில் உள்ளார்களாம். விளவங்கோடு விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள நெய்யாறு அணையின் இடதுகரை கால்வாய் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. 1963 முதல் 2004 வரை இந்த கால்வாய் மூலம் சுமார் 9,200 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்று வந்த நிலையில் 2004ஆம் ஆண்டுக்கு பிறகு முறையான நீர் திறப்பு இல்லாததால், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது. கேரள அரசிடம் இருந்து நெய்யாறு இடதுகரை கால்வாய் வழியாக தண்ணீர் கிடைக்க யார் வழிவகை செய்கிறார்களோ அவர்களுக்கு தான் இந்தமுறை எங்கள் ஓட்டு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்களாம் தொகுதி மக்கள். அதேபோல், ரப்பர் தொழிற்சாலை அமைத்து தரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என குறைபட்டுக் கொள்கிறார்களாம்.

* காங்கிரஸிடம் இருந்து தொகுதியை கைப்பற்ற முயலும் மார்க்சிஸ்ட் கம்யூ.
* விளவங்கோட்டில் கால் ஊன்ற பல முயற்சிகளை எடுத்து வரும் பாஜக
* கொடுத்த வாக்குறுதிகள் கிடப்பிலேயே இருப்பதாக மக்கள் அதிருப்தி

மேலும், மார்த்தாண்டம் தேன் ஆராய்ச்சி மையம், தேன் பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி என்னாச்சு? என கேள்வி எழுப்பும் தொகுதி மக்கள், முந்திரி ஆலைகளை நம்பி இருந்த 50 ஆயிரம் பெண் தொழிலாளர்களின் நலன்காக்க மீண்டும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியில் இருக்கிறார்கள். அதேபோல், செங்கல் சூளைகள் மற்றும் கட்டுமான தொழில்களுக்கு அதிக அளவில் வெளிமாநில தொழிலாளர்கள் வரவழைக்கப்படுவதால் உள்ளூர் கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறும் மக்கள், அதற்கும் தீர்வு எட்டப்படவில்லை என கூறுகின்றனர். இப்படி, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை அடிக்கோடிட்டு காட்டும் தொகுதி மக்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொகுதி பக்கம் தலைகாட்டாதீர்கள் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்களாம்.

* ”வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொகுதி பக்கம் தலைகாட்டாதீர்கள்”
* காங். - திமுக கூட்டணி தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு என பேச்சு


இதுஒருபுறமிருக்க, தற்போது விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி 10 சதவீத ஓட்டுகளையும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி 40 சதவீத ஓட்டுகளையும் பாஜக மற்றும் அதிமுக கட்சி 38 சதவீத ஓட்டுகளையும் இதர கட்சிகள் 12% ஓட்டுகளையும் பெறுவார்கள் என்றே அரசியல் நிலவரம் கூறுகிறது. மொத்தத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அதேபோல், அரசியலில் நியூ என்ட்ரி கொடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வாக்குகளை வாரி அள்ளுவார்கள் என்றும் கூறுகின்றனர். எனினும், வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைவதை பொறுத்தே விளவங்கோடு தொகுதியின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக மார்த்தாண்டம் செய்தியாளர் சேகர்.

Related Link
விஜய்க்கு போட்டியாக நிற்பது யார்?

விஜய்க்கு போட்டியாக நிற்பது யார்?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
7 hrs 8 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved