Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கோயில் தூய்மைப்பணி மேற்கொண்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோயில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூரில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் இளம்பெண் ஒருவர் தூய்மை பணி மேற்கொண்டு வருகிறார். அவரை தனது வீட்டிற்கு சென்று உணவு எடுத்து வர கூறி அந்த கோயிலின் அர்ச்சகர் தியாகராஜன் கூறியுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று தனது வீட்டில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த தியாகராஜன் புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.