news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews குஷ்பு மகளின் திருமணம் - மொத்தமாக ஒரே தீமில் வந்த சினிமா ஸ்டார்ஸ்
tv

Also Watch

tv

Read this

குஷ்பு மகளின் திருமணம் - மொத்தமாக ஒரே தீமில் வந்த சினிமா ஸ்டார்ஸ்

ஒட்டு மொத்தமாக வந்த பிரபலங்கள்

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kushbhu daughter wedding

நடிகை குஷ்பூ - இயக்குனர் சுந்தர் சி தம்பதியினரின் மூத்த மகளான அவந்திகா மோத்வானிக்கும் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் ஜூன் 25-ம் தேதி கோவாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. 

முதலமைச்சர் விஜய் முதல் பிரதமர் மோடி வரை அரசியல் தலைவர்களுக்கும், திரைத்துறை பிரபலங்களுக்கும் குஷ்பு - சுந்தர்.சி தம்பதிகள் அழைப்பு விடுத்தனர். அதன்படி குஷ்பு - சுந்தர்.சி இல்லத் திருமண விழாவில் நடிகை திரிஷா, தமன்னா, ஆர்த்தி, திவ்யதர்ஷினி, சிரஞ்சீவி, நாகார்ஜுனா, அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், வெங்கடேஷ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

குறிப்பாக, திருமணத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பிரபலங்கள் ஒரே மாதிரியான கோல்டன் மற்றும் கிரீம் கலர் தீமை பின்பற்றியிருந்தது ரசிகர்களின் கவனத்தை தற்போது வெகுவாக ஈர்த்து வருதுன்னே சொல்லலாம். இந்த திருமணத்திற்கான அழைப்புகளை சுந்தர்.சி-குஷ்பு தம்பதியினர் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று அழைப்பு கொடுத்திருந்தனர். 

ஆனால் சில காரணங்களுக்காக திருமணத்தில் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கவில்லை. இந்த புது மண தம்பதிக்கு விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு பிரமாண்ட முறையில் நடைபெற இருப்பதாகவும் அதில், பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கலாம் என்று சொல்லப்படுகிறது.


அதே மாதிரி, இயக்குநர் சுந்தர் சி - குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அவந்திகா சுந்தர், ‘அட்டாக்கர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் அதே மாதிரி, இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் தனுஷின் அக்காள் மகன் பவிஷ் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குஷ்புவின் மகள் திருமணத்தில் மறைந்த திரைத்துறை நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான பாக்கியராஜ் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

Related Link
பாக்கியராஜ் உடலை பார்த்து கண் கலங்கிய விஜய்

பாக்கியராஜ் உடலை பார்த்து கண் கலங்கிய விஜய்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் இளைஞர் கைது

0
12 mins agoshare
விருதுநகர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau