பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் கபடி ஆண்கள் பிரிவில் விளையாடி தங்கம் வென்ற திருவாரூரை சேர்ந்த அபிநேஷை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அழைத்து பாராட்டி 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்கினார். அபிநேஷின் பயிற்சியாளர் புவியரசனையும் பாராட்டி ஊக்கத் தொகை வழங்கியதாக தெரிவித்த திருமாவளவன், அபிநேஷுக்கு அரசு வேலை வழங்குவதற்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும், சென்னையில் தங்குவதற்கு ஒரு வீடு வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.