Also Watch
Read this
By: Manigandan Raja

வேன் மோதி விபத்து :
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே கடலூர் மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற வேனும், சிவகங்கை நோக்கி வந்த பொலிரோ பிக் அப் டிரக்கும் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்ட ஸ்ரீமுட்டம் கிராமத்தை சேர்ந்த சுகண்யா தனது உறவினர்கள் சுமார் 15 பேருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவருக்கு சொந்தமான டூரிஸ்ட் வேனை வாடகைக்கு அமர்த்தி சிவகங்கை வழியாக சென்றுள்ளார்.
வேனை சுந்தரமூர்த்தி என்கிற ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். அதே வேலையில் சிவகங்கையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பொலிரோ பிக் அப் வாகனத்தை முத்துப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்கிற ஓட்டுநர் இயக்கி இடையமேலூரில் பொருட்களை இறக்கிவிட்டு மீண்டும்.
சிவகங்கை நோக்கி திரும்பியுள்ளனர். டூரீஸ்ட் வேனும், பொலிரோ பிக் அப் வாகனமும் சிவகங்கை காமராஜர் காலனி சுற்றுவட்ட சாலையில் வரும்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து பிக் அப் டிரக் மீது மோதியதில் பிக் அப் டிரக் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved