news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உயர் மின்னழுத்த கம்பி மீது விழுந்த நுங்கை எடுக்க முயற்சி
tv

Also Watch

tv

Read this

உயர் மின்னழுத்த கம்பி மீது விழுந்த நுங்கை எடுக்க முயற்சி

காஞ்சிபுரம் - சிறு மாங்காடு

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சிறு மாங்காடு

உயர் மின்னழுத்த கம்பி மீது விழுந்த நுங்கு : 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிறு மாங்காடு கிராமத்தில முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களான டெல்லி கணேஷ் (17), தட்சணாமூர்த்தி (17) ஆகிய இருவரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து டிரான்ஸ்பார்ம் அருகில் உள்ள பனைமரத்தில் நுங்கு பரித்துள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக நுங்கு டிரான்ஸ்பார்ம் வயரில் மாட்டிக் கொண்டது. உடனே அதை எடுக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பார்ம் வெடித்து இருவர் மீதும் தீப்பற்றி எரிந்ததில் உடல் முழுவதும் கருகி மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்த நிலையில் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த இரண்டு கல்லூரி மாணவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
ஊருக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் பீதி

ஊருக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் பீதி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

4
41 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved