Also Watch
Read this
Posted on: Feb 22, 2026 11:03 AM
By: Fyrose Banu

ராசிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளனர்.
வீடு வீடாக சென்ற தவெகவினர்
தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள வி.நகர் பகுதியில் தவெக.கட்சியின் சார்பாக வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
நோட்டு, பேனா, இனிப்புகள் வழங்கிய தவெக நிர்வாகிகள்
இந்நிகழ்ச்சி தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெ.ஜெ.செந்தில்நாதன் தலைமையில் நடைப்பெற்றது. முன்னதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்க இனிப்புகளும், குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, இனிப்புகள் வழங்கினர். அதன் பிறகு தவெக கட்சியின் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தியும், துண்டு பிரசுரத்தை வழங்கியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தவெக இளைஞர் அணியினர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் தவெக கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பிரபு, நகரச் செயலாளர் மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ. ஜெ.செந்தில்நாதன் கட்சி பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இங்கு அவர் பல்வேறு களப்பணிகளை ஆற்றி வருவதும் குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved