Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூரில், வாடகை வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார் வி.எம்.நகர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், கஞ்சா பொட்டலங்கள் மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக வாடகைக்கு தங்கியிருந்த இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved