news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சென்னையில் விஜய் பிரச்சாரம், குவிந்த தொண்டர்கள்
tv

Also Watch

tv

Read this

சென்னையில் விஜய் பிரச்சாரம், குவிந்த தொண்டர்கள்

அடுத்த வாரம் தேர்தல்

41

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை எழும்பூர், தியாகராய நகரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல் துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

அடுத்த வாரம் தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. இதற்காக விஜய் சென்னை, பெரம்பூர், திருச்சி ,மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தன்னுடைய வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

சென்னையில் விஜய்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்புகளுக்கும், விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னையில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வேண்டி காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டது.

ஒரு மணி நேரத்திற்கு அனுமதி
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்க காவல்துறையினரிடம் மனு அளித்தது. ஆனால் வில்லிவாக்கம் மற்றும் தி.நகரில் மட்டும் ஒரு மணி நேரம் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள காவல் துறையினர் அனுமதி அளித்தனர்.

காவல்துறை அனுமதி
இதனை தொடர்ந்து விஜய் அந்த பிரச்சார கூட்டத்தை ரத்து செய்தார். இந்த சூழலில் விஜய் சென்னை எழும்பூர், தி.நகரில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல் துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இன்று நான்கு மணி முதல் 5 மணி வரை தியாகராய நகரில் விஜய் பரப்புரை மேற்கொள்ள 27 நிபந்தனைகளுடன் காவல் துறையினர் அனுமதி வழங்கினர்.
இன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை எழும்பூரில் விஜய் பரப்புரை செய்ய 20 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதனால், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Link
தொகுதி மறுவரையறை - விஜய் எதிர்ப்பு

தொகுதி மறுவரையறை - விஜய் எதிர்ப்பு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல்2026 சென்னையை அதிர்ச்சியடைய செய்த ஹைதராபாத் அணி

5
6 mins agoshare
சென்னையை அதிர்ச்சியடைய செய்த ஹைதராபாத் அணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved