news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர்
tv

Also Watch

tv

Read this

விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர்

தவெக தலைமையில் கூட்டணி - தீர்மானம்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vijay

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று, மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்தும், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், இன்று காலை த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என, 1,500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைதுக்கு கண்டனம் பெண்கள் பாதுகாப்பு, விளம்பர மாடல் திமுக ஆட்சியில் தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது என்பதை கூறுவதோடு, சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசுக்கு கண்டனம்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை நிறுத்த கோரி தீர்மானம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிகளை கண்டித்து தீர்மானம்
மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கட்சி தலைவர் விஜய், அவரை காண வரும் மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்
டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாதிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்
வடகிழக்கு பருவமழைக்கு போதிய ஏற்பாடுகளை அரசு செய்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்
தமிழக தொழில்துறைக்கு வந்த முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்
ஜனநாயகத்துக்கு எதிராக கருத்துரிமை, பேச்சுரிமையை சிதைக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்
தமிழக முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தேர்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம்
கட்சியின் மீதும், நிர்வாகிகள் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளைப் பரப்பும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களுக்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதையும் பாருங்கள் - TVK General Council Meeting | முதலமைச்சர் வேட்பாளர் விஜய், தவெக தலைமையில் கூட்டணி, அதிரடி தீர்மானம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிஃபா உலகக் கோப்பை யாருக்கு? இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

0
5 mins agoshare
Messi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau