news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தரமற்ற முறையில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி வள மைய கட்டடம்
tv

Also Watch

tv

Read this

தரமற்ற முறையில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி வள மைய கட்டடம்

கதிரிமங்கலம், திருப்பத்தூர்

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupathur

திருப்பத்தூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 வார்டு பகுதியில் மறுசீரமைக்கப்பட்ட தேசிய கிராம சுயாட்சி திட்டத்தில் கதிரிமங்கலம் ஊராட்சிகாக 84.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம ஊராட்சிக்கான மாவட்ட வள மைய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி குத்து விளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். ஆனால் 84.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஆங்காங்கே
ஓட்டையாகவும், கதவுகள் மெல்லிய தகடு ஆகியவற்றை பயன்படுத்தி கட்டப்பட்டிருந்தன.

மேலும் அந்த கட்டிடம் விரிசல் விட்டதையும் அதேபோல பக்கத்து சுற்றுச்சூருக்கு பெயிண்ட் அடித்து அதையும் கணக்கில் காண்பித்து இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நிருபர் இந்த கட்டிடத்தின் ஒப்பந்ததாரரான திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயா என்பவரின் கணவரான அருணாச்சலத்திடம் கேட்டபோது முதல்ல மொபைலை கீழே வெச்சிட்டு பேசு எனவும் மேலும் தேவை இல்லாம இங்க அதெல்லாம் பேசிட்டு இருக்க கூடாது.

முதல்ல கிளம்பு என நிருபரை மிரட்டும் தோனியில் தெனாவட்டாக பேசி அங்கிருந்து சென்றார். இதன் காரணமாக அங்கு சிறிது பரபரப்பு காணப்பட்டது.

Related Link
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
5 hrs 2 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved