Also Watch
Read this
By: Web Team

முருகனின் அறுபடை வீடு செட் அமைத்து மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் ஆன்மீக மாநாட்டில், அறுபடைவீடு கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மத நிகழ்வுகளில் அரசியல் கலக்க கூடாது என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தவிட்டார்.