Also Watch
Read this
ஆந்திராவில், ஹைதராபாத்தில் இருந்து சென்ற சொகுசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில், தீப்பற்றி விபத்து ஏற்பட்டு, உயிரோடு எரிந்து 10 பயணிகள் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 14 ஆனது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்குவாரி டிப்பர் லாரி மோதல்
ஆந்திர மாநிலம், மார்க்காபுரத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து 14 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திரா நோக்கி நேற்று இரவு 40 பயணிகளுடன் ஒரு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்து, ஆந்திராவில் உள்ள மார்க்காபுரம் அருகே சென்ற போது எதிர் திசையில் கல்குவாரியில் இருந்து வந்த டிப்பர் லாரி, பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தில் இருந்த டீசல் டேங்கரில் தீ பற்றியது. சில நொடிகளிலேயே பேருந்து முழுவதும் தீ பரவிய நிலையில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காவல்துறை விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க ஆந்திர முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 கருணைத் தொகையும் பிரதமர் தேசிய மீட்பு நிதியிலிருந்து PMNRF வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved