Also Watch
Read this
By: Manigandan Raja

நொய்டாவில் அமைந்துள்ள வீட்டு உபயோக பொருட்கள் சந்தை :
உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள வீட்டுப் பொருட்கள் சந்தையில், வெள்ளிக்கிழமை மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீ விபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அழிந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தீயானது 4 முதல் 5 வீட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைச் சூழ்ந்து கொண்டதாகக் போலீசார் தெரிவித்தனர்.
புறப்பட தயாராக இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து :
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நம்பள்ளி ரயில் நிலையத்தில் ஹைதராபாத்- ஜெய்ப்பூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நாட்டில் உயர்த்தப்பட்ட எரிபொருள் விலை:

எரிபொருள் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, கர்நாடகத்திலுள்ள தனியார் பேருந்து நிறுவனங்கள் நள்ளிரவு முதல் பேருந்துக் கட்டணத்தை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தியதாக அறிவித்துள்ளன.
உயர்த்தப்பட்ட சாலை வரி, மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் மற்றும் சமீபத்திய எரிபொருள் விலை உயர்வு ஆகியவை பேருந்து நிறுவனங்கள் மீதான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் பேச்சு :

நடந்து முடிந்த மேற்கு வங்கத் தேர்தல் தொடர்பாக கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டியதாகவும் வந்த புகாரைத் தொடர்ந்து தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி அபிஷேக் பானர்ஜி மீது சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அபிஷேக் பானர்ஜியின் உரைகளில், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் உள்ளடக்கம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணியின் போது ஜெனரேட்டரால் மின் கசிவு :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பராமரிப்பு பணியின் போது ஜெனரேட்டர் மின் கசிவால் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய ஊழியரை கிரேன் உதவியுடன் மீட்ட சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 7 ரோடு சந்திப்பு பகுதியில் விஜய் என்ற ஊழியர் மின்கம்பத்தின் மீது இருந்த போது மின்சாரம் பாய்ந்த நிலையில், உடனே மீட்கப்பட்டதால் தப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved