Also Watch
Read this
By: Manigandan Raja

சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் நம்பிக்கை :
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும், சென்னை அணி பிளே ஆப் சுற்றில் நுழைய வாய்ப்புள்ளதாக அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்தார். அடுத்து வரும் இரண்டு லீக் போட்டிகளில் வென்றால் நிச்சயம் பிளே ஆப்-க்கு தகுதி பெறுவோம் என்றும், அது வீரர்களின் கைகளில்தான் உள்ளது எனவும் அவர் கூறினார்.
மோசமான சாதனையை பதிவு செய்த சிஎஸ்கே வீரர் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ((Anshul Kamboj)) இந்த சீசனில் குறைந்த ஓவர்களில் அதிக ரன்களை அள்ளிக் கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே வீசிய அன்ஷுல், 63 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இவர் வீசிய 17ஆவது ஓவரில் பூரன் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை நிறைவு செய்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் தகவல் :

ஐபிஎல் தொடரில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முன்னதாகவே வெளியேறிய நிலையில், அடுத்த சீசனிலும் அணியில் விளையாடுவேன் என கேப்டன் ரிஷப் பந்த் கூறினார். 12 லீக் போட்டிகளில் ஆடியுள்ள லக்னோ அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
RCB அணியில் துஷாரா-வுக்கு மாற்றாக ரிசர்ட் சேர்ப்பு :

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் கலீல் அகமது வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் முன்னாள் வீரர் குல்தீப் யாதவை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் RCB அணியில் இருந்து வெளியேறிய துஷாரா-வுக்கு மாற்றாக இங்கிலாந்து வீரர் ரிசர்ட் கலீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
தோனியை சிறப்பு விருந்தினராக அழைக்க படக்குழு திட்டம் :
போபாலை தொடர்ந்து வரும் 18ஆம் தேதி மும்பையில் ராம் சரணின் 'PEDDI' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில், நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சிறப்பு விருந்தினராக அழைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. உலக அளவில் திரைப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved