கொல்கத்தாவில் ஹால்டியா துறைமுகம் அருகே, வங்க கடலில் புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது. வங்கதேச துறைமுகங்களில் சீனா முதலீடு செய்து ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ளும் முயற்சியாக, புதிய கடற்படை தளம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம், வங்கதேச கடற்கரை பகுதி மற்றும் அங்கிருந்து வரும் கப்பல் போக்குவரத்தை எளிதாக கண்காணிக்க முடியும் என்றும், அந்த தளத்தில் சிறியரக தாக்குதல் கப்பல்கள் நிலை நிறுத்தப்படும் என்றும் கடற்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இதையும் படியுங்கள் : அயோத்தி ராமர் கோவிலை சுற்றி அசைவ உணவு டெலிவரி செய்ய தடை