கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மிதமிஞ்சிய கஞ்சா போதையில் இருந்த இளைஞர், தனது கை துண்டாகி ரத்தம் கொட்டியபோதும் அதனை உணரக்கூடிய நிலையில் இல்லாமல் ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேவநஹள்ளியில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து வெட்டுப்பட்ட கையுடன் ஓடி வந்த இளைஞரை போலீசார் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆம்புலன்சில் ஏற்றி அழைத்து சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்து கையில் கட்டுப்போட்ட மருத்துவர்கள், இளைஞருக்கு போதை தெளிந்த பிறகே அவருக்கு என்ன நேர்ந்தது என தெரியவரும் என தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : கயிற்றில் தொங்கியவாறு 50 அடி உயரத்தில் தவித்த இளைஞர்