Also Watch
Read this
By: Web Team

துபாயில் கேரள அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கேரள கொச்சின் பல்கலைக்கழகத்தின் பி.டெக் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வு துபாயில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி மற்றும் உமர் குல் ஆகியோர் வருகை தந்த நிலையில், இருவருக்கும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு, மேடையில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனிடையே இந்தியாவிற்கு எதிராக பேசியவரை நிகழ்ச்சிக்கு அழைத்தது இந்தியாவை அவமதிக்கும் செயல், என சமூகவலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved