Also Watch
Read this
By: Web Team

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவு கூடக்கூடிய நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என மைக்கேல் டி குன்ஹா ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்த ஆணையத்தின் அறிக்கையின்படி, மைதானத்தின் “வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு அதிக மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மைதானத்தில் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் மகளிர் உலகக் கோப்பையின் முக்கியமான போட்டிகள், வேறு இடத்துக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.