Also Watch
Read this
By: Manigandan Raja

முறையான கட்டட அனுமதி பெறவில்லை எனக் கூறி இடிப்பு
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறையான கட்டட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அலுவலகம் இடிப்புக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
கோதாவரி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற 3 பெண்கள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலவரம் அருகே உள்ள கொள்ளகூடம் பகுதியை சேர்ந்த 8 பேர் கோதாவரி ஆற்றில் வலை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 5 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
உத்தவ் அணியில் இருந்து ஷிண்டே அணிக்கு தாவிய எம்பிக்கள்

மகராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற 6 அதிருப்தி எம்பிக்களும், ஷிண்டே சிவசேனாவுடன் இணைந்ததை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார். மூன்றில் 2 பங்கு பிரிந்து சென்றதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved