மேற்கு வங்கத்தில், 'ஐ - பேக்' நிறுவனத்தில் நடந்த சோதனையை, அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி குறுக்கிட்டு தடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. சோதனையின் போது நடந்த நிகழ்வுகளை வரிசைப்படுத்தியுள்ள அமலாக்கத் துறை, மேற்குவங்க அரசின் தலையீட்டால் நியாயமான விசாரணை நடத்தும் உரிமை பறிக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தங்களது தரப்பை கேட்காமல் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக்கோரி, மேற்கு வங்க அரசும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.இதையும் படியுங்கள் : ஹால்டியா துறைமுகம் அருகே வங்க கடலில் புதிய கடற்படை தளம்