Also Watch
Read this
By: Web Team

மாலத்தீவின் நம்பகமான நண்பனாக இந்தியா இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்ததோடு, அந்நாட்டின் மேம்பாட்டிற்காக, 4 ஆயிரத்து 850 கோடி ரூபாயை இந்தியா கடனாக அளிக்கும் என்று அறிவித்தார்.
இரு நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் முய்சுவை நேரில் சந்தித்தார். இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் மொத்தம் 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக இருநாட்டு தலைவர்களும் இணைந்து மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சக கட்டடத்தை திறந்து வைத்தனர்.மாலத்தீவு சென்றடைந்த பிரதமரை அங்கிருந்த இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.