news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews கையிருப்பில் உள்ள ரூ.1.14 லட்சம் கோடி தங்கம் விற்பனை?
tv

Also Watch

tv

Read this

கையிருப்பில் உள்ள ரூ.1.14 லட்சம் கோடி தங்கம் விற்பனை?

தங்கம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கம் விற்பனை

இந்திய ரிசர்வ் வங்கி விற்பனை செய்ததாக வெளியான தகவல் :

ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்ததாக வெளியான தகவலை நிதியமைச்சகம் மறுத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் 2025 - 26-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில், தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, ரிசர்வ் வங்கி கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்ததாக தகவல் வெளியானது.

"தேர்தல் நடைமுறை மீதான மக்கள் நம்பிக்கையின் அடையாளம்" :

வாக்குப்பதிவு அதிகரிப்பு என்பது தேர்தல் நடைமுறை மீதான மக்கள் நம்பிக்கையின் அடையாளம் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தேர்தல் முறையில் ஊடகங்களின் சிறப்பான பங்களிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவில் தேர்தல் முறையை எவ்வாறு இன்னும் மேம்படுத்துவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வெனிசுலாவின் இடைக்கால அதிபர் இந்தியா வருகை :

வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ((Delcy Rodriguez )) 5 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், டெல்சியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியை டெல்சி இன்று சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது :

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் ,6 அதிநவீன கைத்துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் அம்ரித்சர் போலீசார் தெரிவித்தனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை :

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர்((Kanker)) அருகே ஹிதூர்((Hidur)) வனப்பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியதில் 3 கிலோ கிராம் எடை கொண்ட டிஃபின்((tiffin )) வெடி குண்டுகளை மீட்டெடுத்து சம்பவ இடத்திலேயே செயலிழக்கச் செய்தனர்.

தொடர்ந்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Related Link
கர்நாடக முதல்வரானார் டி.கே.சிவகுமார்

கர்நாடக முதல்வரானார் டி.கே.சிவகுமார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கையிருப்பில் உள்ள ரூ.1.14 லட்சம் கோடி தங்கம் விற்பனை?

1
2 hrs 9 mins agoshare
தங்கம் விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved