Also Watch
Read this
By: Web Team

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை முழுமனதுடன் வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எளிமையான மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டமைப்புகளை உறுதி செய்ய சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள், வேளாண், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி முறை, முன்னேற்றத்தை உறுதி செய்வதாகவும், புதிய வரி விகிதம் நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.