Also Watch
Read this
By: Manigandan Raja

கரடி உலா செல்லும் வீடியோவால் பக்தர்கள் அச்சம் :
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வதற்காக பயன்படுத்தப்படும் இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம் உள்ளதாக வீடியோ வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த நபர் கைது :

கேரளம் மாநிலம் வயநாட்டில் வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த நபரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் அம்பலவயல் பகுதியில் உள்ள ரெஜி என்பவர் வீட்டின் தோட்டத்தில் சோதனையிட்ட போலீசார் 360 சென்டிமீட்டர் உயரம் உள்ள கஞ்சா செடிகள் காணப்பட்ட நிலையில் அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
சம்பளம் ரூ.6,000தான்: சொத்து மதிப்பு சுமார் ரூ.40 கோடி :

ஒடிசாவில் அரசு இன்ஜினியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், 2 கோடியே 40 லட்சம் ரூபாய் ரொக்கம், 341 கிராம் தங்க நகைகள், 5 அடுக்குமாடி வீடுகள் மற்றும் 13 வீட்டு மனைகளுக்கான ஆவணங்கள் சிக்கியது.
மாநில பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் உதவி நிர்வாக இன்ஜினியராக பணியாற்றும் வைகுண்டநாத் பெஹரா வீட்டில் சோதனை நடந்தது.
மனைவி மீது சந்தேகம் - கொலை செய்த கணவன் :

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவினாஷின் மனைவி கோமளி வீட்டு வேலை செய்து வந்த நிலையில், தாமதமாக வீடு திரும்புவதால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவத்தன்று ஏற்பட்ட சண்டையில் அவினாஷ் ஸ்க்ரூடிரைவரால் கோமளியை குத்தி கொலை செய்துள்ளான்.
தமிழக காங்கிரஸ் மேலிட செயலாளர் சூரஜ் ஹெக்டே மரணம் :
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட செயலாளர் சூரஜ் ஹெக்டே திடீர் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் பதிவிட்டு வருகின்றனர்.
இவர், கர்நாடக மாநில அரசின் உத்தரவாதங்கள் அமலாக்க ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved