news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிரேக் பிடிக்காத பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
tv

Also Watch

tv

Read this

பிரேக் பிடிக்காத பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

சிதம்பரம், கடலூர்

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சிதம்பரம்

வேளாங்கண்ணியில் இருந்து சென்னை செல்வதற்கு தனியார் சொகுசு பேருந்து யுனிவர்சல் மாலை புறப்பட்டு காரைக்கால் வந்தடைந்துள்ளது. காரைக்காலில் இருந்து வேறொரு ஓட்டுனர் பேருந்தை இயக்கி வந்த போது பேருந்தில் பிரேக் பிடிக்காமல் இருந்துள்ளது, இருந்த போதிலும் பேருந்து ஓட்டுனர் மெதுவாக இயக்கி வந்துள்ளார். இந்த பேருந்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை நோக்கி வந்த நிலையில் பேருந்து மிகவும் குறைவான வேகத்தில் இயக்கியதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் என்ன காரணம் என்று கேட்டபோது பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று ஓட்டுனர் மற்றும் பணியில் இருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மேடு பள்ளத்தில் பேருந்து முன் பக்கமாகவும் பின்பக்கமாகவும் சென்றதாகவும் சில இடங்களில் பிரேக் பிடிக்கும்போது பேருந்து ஒரு பக்கமாக இழுத்து சென்றதாகவும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சகர தகவலை தெரிவித்துள்ளனர். பேருந்தில் பிரச்சனைகள் அல்லது பழுது ஏற்பட்டால் உரிய பராமரிப்பு செய்து பேருந்து புறப்பட வேண்டும் ஆனால் பேருந்து ஓட்டுநர் நேரத்தை கணக்கில் கொண்டு பேருந்தில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை எனவும் பேருந்தில் இருந்த பயணிகளின் உயிரை கூட பொருட்படுத்தாமல் பிரேக் பிடிக்காத பெருந்தை சுமார் 67 கிலோ மீட்டர் தூரம் மெதுவாக இயக்கி வந்து சிதம்பரத்தில் நிறுத்திய பிறகு பேருந்தில் இருந்த பிரச்சனைகளை தெரிவித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து பேருந்தில் பயணம் செய்த பயணி கூறுகையில் பேருந்து மிகவும் பொறுமையாக சென்றதாகவும் அப்போது ஓட்டுநர் பராமரிப்பாளரிடம் கேட்டபோது ஒன்றுமில்லை என தெரிவித்ததாகவும் ஆனால் சிறு மேடு பள்ளம் இருந்தால் கூட பேருந்து பின்பக்கம் முன் பக்கம் சென்றதாகவும் பிரேக் பிடித்தால் ஒரு பக்கமாக பேருந்து சென்றதாகவும் ஆபத்தில் நாம் பேருந்தில் பயணம் செய்து வருவதாகவும் ஆனால் இதனை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

எனவே தனியார் பேருந்துகளை அவ்வப்போது ஆய்வு செய்து பொதுமக்களின் பயணங்களை பாதுகாப்பாகவும் இதுபோன்ற அலட்சியமாக இருக்கும் தனியார் பேருந்துகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தனர்.

Related Link
வனவிலங்குகளை வேட்டையாட வந்தவர்கள் கைது

வனவிலங்குகளை வேட்டையாட வந்தவர்கள் கைது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
11 hrs 4 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau