news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டீக்கடை உரிமையாளர் மீது சரமாரியாக தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

டீக்கடை உரிமையாளர் மீது சரமாரியாக தாக்குதல்

குடியாத்தம், வேலூர்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சரமாரியாக தாக்குதல்


சரமாரியாக தாக்குதல் : 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை எதிரே உமாபதி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை மூன்று இளைஞர்கள் போதையில் டீக்கடைக்கு வந்து டீக்கடையில் வாட்டர் பாட்டில் வாங்கி உள்ளனர் அப்போது வாட்டர் பாட்டில் என் கூலிங் இல்லை ஏன் டீக்கடை உரிமையாளர் உமாவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

அப்போது போதையில் இருந்த மூன்று இளைஞர்களும் உமாபதியை சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் டீக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது அந்த இளைஞர்கள் அதே பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது


இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த மூன்று இளைஞர்களையும் பிடித்து விசாரணை செய்ததில் குடியாத்தம் அடுத்த சித்தாதூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்கின்ற தமிழரசன்
வயது 25 குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டி பகுதியை சேர்ந்த வாசுதேவன் வயது 25 குடியாத்தம் தாளையாத்தம் பகுதியை சேர்ந்த விக்கி வயது 23 என்பது தெரியவந்தது.

பின்னர் மூன்று இளைஞர்களையும் பிடித்து நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். போதையில் டீக்கடை உரிமையாளரிடம் வாட்டர் பாட்டில் கூலிங் இல்லை என்று கூறி
சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Link
அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
10 hrs 13 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau