Also Watch
Read this
By: Manigandan Raja

பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி இளைஞர் மீது தாக்குதல்
மத்தியப் பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி இளைஞர் ஒருவரை பெண்கள் கடுமையாக தாக்கி அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. மக்கள் அதிகம் கூடும் மங்கள் பஜார் சந்தையில் நடந்த இச்சம்பவத்தில், கம்பு மற்றும் செருப்பால் இளைஞரை பலமாக தாக்கிய அப்பெண்கள், அவரை ஊர்வலமாக இழுத்து சென்று உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காதலியை கொலை செய்து விட்டு காதலனும் தற்கொலை
மகாராஷ்டிராவில் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதால் ஆத்திரமடைந்த காதலன், அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யவத்மால் மாவட்டத்தை சேர்ந்த சஹில் லவ்ஹாரே, அமராவதி மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவியை காதலித்து வந்துள்ளார். வைஷ்ணவிக்கு சமீபத்தில் வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதாக கூறப்படுகிறது.
லிப்டுக்குள் இருந்த சிறுமிகளின் மீது பாய்ந்த நாய்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், லிஃப்டுக்குள் வாய்க்கவசம் அணிந்திருந்த நாய் ஒன்று மூன்று சிறுமிகள் மீது பாய்ந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் லிஃப்டுக்குள் நடந்த இந்த சம்பவத்தில் சிறுமிகள் நாயிடமிருந்து தப்பிக்கப் போராடுவதும், நாயின் உரிமையாளர் அதை அடக்க முயல்வதையும் வீடியோவில் காண முடிகிறது.