news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சூறைக் காற்றில் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்
tv

Also Watch

tv

Read this

சூறைக் காற்றில் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்

தஞ்சாவூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வாழை மரங்கள் முறிந்து சேதம்

வாழை மரங்கள் முறிந்து சேதம் :

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நேற்று இரவு வீசிய சூறைக்காற்றுடன் பெய்த மிதமான மழையால் சுமார் 5,000 வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடியில் அதிகளவிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றால் மேல உத்தமநல்லூர், உப்பு காட்சிப்பேட்டை, கடையை தோப்பு,
வைத்தியநாதன் பேட்டை, கல்யாணபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பூவம் வளை, செவ்வாழை, மரங்கள் குலை தள்ளும் பருவத்தில் முறிந்து விழுந்தன.

இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விளைச்சலை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே சேதமடைந்த வாழை மரங்களை வேளாண் துறை
அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என புகார்

வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தல்

0
4 hrs 32 mins agoshare
திக்விஜய் சிங்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved