news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news விடிய விடிய நடைபெற்ற தசாவதாரத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

விடிய விடிய நடைபெற்ற தசாவதாரத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்பு

ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை கள்ளழகர் கோவில் திவான் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற தசாவதாரத்தில் கோவிந்தா கோபால பெருமாளே என பஜனை பாடல்களை பாடிய பக்தர்கள் பெருமாளை ஒவ்வொரு அவதாரத்திலும் சேவைகளிலும் சேவை சாத்தினர். சித்திரை திருவிழாவில் திவான் ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் எழுந்தருளிய சுவாமியை திரளான பக்தர்கள் மனமுருகி வழிபாடு செய்தனர்.

மதுரையில் சித்திரை திருவிழா
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மதுரையில், பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் திருவிழா, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா என வருடத்தில் 365 நாட்களுமே விழாக்கள் நடைபெறுவது வழக்கம். வைகை ஆற்றில் எழுந்தருளிய பிறகு, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்த லீலையை முடித்துக் கொண்டு திவான் ராமராயர் மண்டகப்படிக்கு கள்ளழகர் எழுந்தருளினார்.

விடிய விடிய தசாவதாரம்
விடிய விடிய நடைபெற்ற தசாவதாரத்தில் கோவிந்தா கோபாலா பெருமாளே என்று பஜனை பாடல்களோடு பக்தர்கள் பக்திப் பாடல்கள் பாடி பெருமாளை ஒவ்வொரு அவதாரத்திலும் சேவை சாத்தினர். ஒவ்வொரு அவதாரத்தின் முடிவிலும் பக்தர்களுக்கு தீபாராதனை துளசி தீர்த்தம் வழங்கப்பட்டதோடு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், சுண்டல், புளியோதரை என பிரசாதங்களும் வழங்கப்பட்டன. 

பூப்பல்லக்கு சேவை
தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். அதே திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். மே 5ம் தேதி அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக காலை 10.40 மணிக்கு மேல் 11.10 மணிக்குள் இருப்பிடம் சென்றடைகிறார். மே 6ம் தேதி உற்சவ சாந்தியுடன் அழகர்கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Link
இன்றைய ராசி பலன்கள் 03052026

இன்றைய ராசி பலன்கள் 03052026

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாக்கு எண்ணிக்கை - தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

4
9 mins agoshare
வாக்கு எண்ணிக்கை - தேர்தல் அதிகாரியிடம் திமுக மனுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved